கோவையில் புயல் போல் சீரிய சூறாவளி மழை…!
கோவை மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. பேரூர் தொண்டாமுத்தூர், ஆனைகட்டி பகுதிகளில் காற்று வீச்சு அதிகமாக காணப்பட்டது. சூறாவளி காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் சேதம் ஏற்பட்டது. மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. இதில் பல இடங்களில் வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்து விட்டது. வாகன ஓட்டிகள் காற்றின் வேகம் தாங்க முடியாமல் ரோட்டோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டனர். வீட்டில் இருந்த…
