கோவையில் டிரான்ஸ்பார்மர்கள் பற்றாக்குறை…
கோவை மண்டலத்தில் 250 கிலோவாட் திறன் கொண்ட மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) ஒதுக்கீடு செய்யப்படாததால், புதிய தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மின் இணைப்பு பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை மண்டலத்திற்கு உட்பட்ட அனைத்து வட்ட அலுவலகங்களிலும், அவற்றின் கீழ் செயல்படும் பிரிவு அலுவலகங்கள் மூலம் புதிய தொழிற்சாலைகள், குறுந்தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு மின் இணைப்புகளுக்காக பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். இதற்கான மின் கம்பங்கள் அமைத்தல் உள்ளிட்ட வாரிய…
