அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் ரெய்டு பீதி…

கோவை மாவட்டத்தில் அரசு துறை அலுவலகங்களில் தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ரெய்டு நடத்தி வருகின்றனர்.

பத்திர பதிவு அலுவலகங்களை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய்த்துறை, வணிக வரி, மின் வாரியம் என பல்வேறு துறைகளில் தீபாவளி வசூல் உச்ச கட்டமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. பட்டா மாறுதல் விவகாரங்களில் பணம் வசூல் கொடி கட்டி பறப்பதாக தெரிகிறது.

சில அலுவலகங்களில் யார் யாரிடம் எவ்வளவு தொகை லஞ்சமாக பெறப்பட்டது என விவரங்கள் வெளிப்படையாக கிடைக்கிறதாம். சிலர் ஜிபே மூலமாக தைரியமாக லஞ்சம் வாங்கி குவிக்கிறார்கள். இந்த விவகாரம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசிற்கு புகார் சென்றது. இந்த நிலையில், மாலை நேரத்தில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சர்ப்ரைஸ் செக்கிங் வந்து விடுவார்கள்.

லஞ்சம் வாங்காவிட்டாலும் வேறு யாராவது லஞ்சம் வாங்கியிருந்தாலும் வழக்கு விசாரணை என அவைய வேண்டியிருக்கும் என்ற பயத்தில் லஞ்சம் வாங்காத அலுவலர்கள் கூட பயத்தில் உள்ளனர். சிலர் அலுவலர்கள் பர்மிஷன் வாங்கி மாலை 5 மணிக்கே புறப்பட்டு செல்கின்றனர் இதனால் மாலை நேரங்களில் அரசு அலுவலகங்கள் ஆள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *