கோவை கால்நடை மருத்துவமனையில் குவாட்டரும் குப்பையும்…!

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள கால்நடை பன்முக மருத்துவமனையில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கிறது.

இதில் கால்நடைகளுக்கான மருத்துவ சிகிச்சை மற்றும் அலுவலக பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் பழைய கட்டுமான பிரிவுகளும் பழுதான நிலையில் அபாயகரமாக அப்படியே இருக்கிறது. 80 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மருத்துவமனை கட்டிடம் இடியும் நிலையில் இருக்கிறது. இந்த கட்டிட வளாகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது.

அபாயம் இருக்கிறது என அந்த பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு வைக்கப்பட்டிருக்கிறது.இதே போல் பழைய அறுவை அரங்கம் மற்றும் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பிரேத பரிசோதனை இடமும் பயன்பாடு இன்றி மூடி கிடக்கிறது. மதுபாட்டில்கள், குப்பைகள் இங்கே ஏராளமாக குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. இதை கால்நடை பராமரிப்பு துறையினர் கவனத்தை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3 thoughts on “கோவை கால்நடை மருத்துவமனையில் குவாட்டரும் குப்பையும்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *