பொலிவுடன் தயாரானது கோவை குதிரை வண்டி கோர்ட்…!

கோவை அவிநாசி ரோடு உப்பிலிபாளையம் மேம்பாலம் பகுதியில் குதிரை வண்டி கோர்ட் செயல்பட்டு வந்தது.

கடந்த 1863ம் ஆண்டு கால கட்டடத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது இந்த கோர்ட் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக தெரிகிறது. இதில் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது, வஉசி சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பான வழக்குகளிலும் இந்த கோர்ட்டில் தான் தீர்ப்பு வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பெருமை வாய்ந்த இந்த கோர்ட் முடக்கப்பட்டாலும் இடிக்கப்படாமல் அப்படியே பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது பொதுப்பணித்துறையின் ஹெரிடேஜ் பிரிவினர் இந்த கட்டடத்தை பழமை மாறாமல் சுமார் 9 கோடி ரூபாய் செலவில் புதுப்பித்து வருகின்றனர். கடந்த காலங்களில் கட்டடம் எப்படி இருந்ததோ அதேபோல் புதுப்பித்துள்ளனர்.

இந்த தோற்றம் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கட்டடம் சீரமைப்பு பணி முடிந்த போதும் இன்னும் திறக்கப்படவில்லை. இந்த கட்டிடத்தில் பின்புறம் பல மாடியில் புதிய கோர்ட் கட்டிடம் கட்டும் பணியும் தொடர்ந்து நடக்கிறது. அந்த பணி விரைவில் முடியும் நிலைமையில் இருக்கிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் பழைய குதிரை வண்டி கோர்ட் கட்டடமும் திறக்கப்படும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

பிரிட்டிஷார் ஆட்சி காலத்தில் குதிரை கட்டும் இடமாக இந்த பகுதி இருந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அடையாளம் சொல்லி அழைத்ததால் இந்த பெயர் உருவானதாக தெரிகிறது. கடந்த காலங்களை நினைவு கூறும் வகையில் இங்கே மீண்டும் கோர்ட் கட்டுமானம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமானம் கோவையின் வரலாற்றுக்கு சான்றாக அமைந்துள்ளது.

One thought on “பொலிவுடன் தயாரானது கோவை குதிரை வண்டி கோர்ட்…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *