இன்று இரவு 10 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடை…! அப்புறம் 3 நாள் லீவு
கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கடைகள், பார்கள், எப்எல் 2, எப்எல் 3 உரிமம் பெற்ற மதுபான கடைகள் வரும் 21ம் தேதி காலை 10 மணி முதல் 23ம் தேதி வரை மூடப்படும்.
3 நாட்கள் அனைத்து வகையான மதுபான கடைகளும் மூடப்பட்டிருக்கும். மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஓட்டு எண்ணிக்கை நாளான வரும் மே மாதம் 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்படும். அன்றைய தினமும் முழுவதும் மதுபான கடைகள் திறக்கப்படமாட்டாது என மாவட்ட நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் கலால் துறை மற்றும் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது. மதுபான கடைகளில் பல்க் சேல் செய்யக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
