கோவையில் அதிமுக பரிசு பொருட்களை அள்ள நினைத்த பறக்கும் படை..
கோவை மாவட்டத்தில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவித்ததும் நடத்தை விதிகள் அமலாக்கப்பட்டது. பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு படையினர் மாலை 6 மணி முதல் செக்கிங் துவக்கினார்கள்.
தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் வேட்டி சேலை, பாத்திரம், ஹாட் பாக்ஸ் என பரிசு பொருட்கள் டோக்கன் தந்து கொடுப்பதாக புகார் வந்தது. சில இடங்களில் பறக்கும் படை வாகனங்கள் சென்று பார்த்த போது ஒவ்வொரு வீட்டிலும் அகிமுக தந்த பரிசு பொருட்கள் இருந்ததாம்.
இதை யார் எப்போ தந்தார்கள் என பறக்கும் படையினர் விசாரித்தனர். அப்போது மக்கள் குழப்பமான பதிலை கூறினார்களாம். தேர்தல் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்திய போது ஏற்கனவே கொடுத்த டோக்கன், பரிசு பொருட்கள் தான் இது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலானதும், பரிசு பொருட்கள் தரவில்லை என அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாக கூறி விட்டார்களாம். சில இடங்களில் பரிசு பொருட்கள் குடோனில் பதுக்கி இருப்பதாக தகவல் வந்தது.
சில வீடுகளில் டோக்கன் இருக்கிறது. பரிசு பொருட்கள் தரவில்லையாம். அங்கே இரவோட இரவாக அனுப்ப அதிமுகவினர் ஏற்பாடு செய்திருப்பதாக தகவல் வந்தது. தேர்தல் பிரிவினர், நீங்க எப்படி எந்த நேரத்தில் பரிசு பொருட்கள் தருவீங்க நாங்க தொடர்ந்து சோதனை செய்வோம் எனக்கூறி விட்டு கோவைப்புதூர், சுண்டக்காமுத்தூர், பேரூர், செல்வபுரம், ஆலாந்துறை, தொண்முத்தூர் வட்டாரங்களை கண்காணித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி (RDO) மாருதி பிரியா கூறுகையில், “பரிசு பொருட்கள் தொடர்பாக சில புகார்கள் வந்தது, அதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டில் குடோனில் வைத்திருப்பது தொடர்பாக யாரும் புகார் தரவில்லை.
நாங்களும் தொடர்ந்து சோதனை செய்கிறோம். அப்படி பதுக்கி வைத்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கிய பொருட்கள் வெளியே எடுத்த வருவார்களா என நாங்கள் கரத்திருக்கிறோம். என்றார்.
