கோவையில் இலை வியாபாரி கொலை: மனைவி மகன் கைது

கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (46 ).
வாழை இலை வியாபாரி .இவர் மனைவி பூங்கொடி (43) இவர்களது மகன் அருண்குமார் (21) மற்றும் விஷ்ணு பிரசாத் (18.. விஜயகுமாருக்கு மது போதை பழக்கம் உள்ளது . தினமும் அவர் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் இவர் தனது வீட்டில் வழக்கம் போல் மது போதையில் வந்து தகராறு செய்தார். அதற்குப் பிறகு அவர் தூங்குவதற்காக சென்றுவிட்டார் . இந்த நிலையில் இவரது குடும்பத்தினர் விஜயகுமார் தூங்கிக் கொண்டிருந்தபோது சுயநினைவின்றி கிடந்ததாகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் .
அப்போது அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது விஜயகுமாரின் கழுத்து பகுதி அதிக அளவு அழுத்தம் ஏற்பட்டு குரல்வளை நசுக்கி கொலை செய்யப்பட்ட விவரம் தெரியவந்தது.
இது தொடர்பாக பேரூர் போலீசில் டாக்டர்கள் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது பூங்கொடி மற்றும் அவரது மகன் அருண்குமார் ஆகியோர் விஜயகுமார் தூங்கும் போது கழுத்தை நெரித்து கொலை செய்வது தெரிய வந்தது. அவர்கள் கொலையை மறைப்பதற்கு உடல்நிலை பாதிப்பினால் இறந்து விட்டதாக கூறி நாடகம் நடத்தியதும் தெரியவந்தது .போலீசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர் .
அவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில்,”விஜயகுமார் தினமும் மது போதையில் எங்களை டார்ச்சர் செய்து வந்தார் . மேலும் அவதூறாக கேவலமாக பேசி வந்தார் . இதில் கோபம் அடைந்த நாங்கள் அவரை கொலை செய்தோம் என தெரிவித்தனர். கணவரை கொலை செய்த மனைவி மற்றும் மகனை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
