கோவையில் கல்லூரி விடுதி கேண்டீனில் புழு பூச்சிகள் இருப்பதாக மீண்டும் புகார்
கோவை மாவட்டத்தில் கல்லூரிகள் அதிகமாக இருக்கிறது. கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் செயல்படுகிறது.
இதில் கேண்டின் அமைக்கப்பட்டிருக்கிறது. தினமும் பல ஆயிரம் பேருக்கு உணவு தயார் செய்யப்படுகிறது. இந்த கேண்டின்களில் தயாரிக்கப்படும் உணவுகளில் புழு, பூச்சி மற்றும் தர குறைபாடு பிரச்சனை இருப்பதாக அடிக்கடி புகார் வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை நடப்பாண்டில் 6 கல்லூரிகளில் உணவு குறைபாடு தொடர்பாக புகார் தரப்பட்டிருக்கிறது.
மாவட்ட அளவில் 13 கல்லூரி கேண்டின்களில் ஆய்வு நடத்தப்பட்டு உணவு பாதுகாப்பு துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. கேண்டின் உணவு புழு பூச்சி தொடர்பான வீடியோ பதிவுகள் அடிக்கடி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் உள்ள கேண்டீனில் புழு பூச்சி இருப்பதாக புகார் தரப்பட்டது.
இது தொடர்பாக ஆய்வுப் பணி நடக்கிறது. இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறையினரிடம் கேட்டபோது, “கல்லூரி கேண்டின்களில் உணவுகளை தரமாக தயார் செய்ய வேண்டும் என அறிவுயை கூறியிருக்கிறோம். இதில் கத்திரிக்காய் மற்றும் பீன்ஸ் போன்றவற்றில் இருந்து தான் புழு பூச்சி இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த காய்கறிகளில் புழு பூச்சி இருக்கிறதா என கவனமாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.
அரிசிகளில் புழு பூச்சி தொடர்பாகவும் பிரச்சனை எதுவும் இல்லை. தண்ணீரும் தரமாக தான் பயன்படுத்துகிறார்கள். காய்கறிகளில் தான் இந்த பிரச்சனை இருக்கிறது. அதை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும் என அறிவுரை சொல்லி இருக்கிறோம். இந்த பிரச்சனைக்காக கேண்டீன்களை மூடும் அவசியம் ஏற்படவில்லை தொடர்ந்து உணவு தயாரிப்புகளை கண்காணித்து வருகிறோம்.” என்றனர்.

I really appreciate the local touch and the ease of access. It feels like it was designed specifically for users like us. phpark24ph
I was looking for a reliable place to grab the latest APKs and this site really delivered. The download speed is impressive and everything works perfectly. Definitely checking out in7apkdownloadin again soon!
The graphics are stunning and the gameplay is very immersive. I spent hours here and didn’t even notice the time passing. I love inyyycasino so much.