கோவையில் வாலிபர் தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி
சாலையோரம் வசித்து வந்த வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொல்ல முயன்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை செல்வபுரம் போயர் வீதியை சேர்ந்தவர் சூரியா (35), இவர், குடும்பத்தை பிரிந்து சாலையோரம் தங்கி, கிடைக்கும் வேலையை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு சூரியா செட்டி வீதி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது அருந்தி விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், சூரியாவிடம் திடீரென தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த அந்த நபர் கீழே கிடந்த கல்லை எடுத்து சூரியாவின் தலையில் போட்டார் அதில் ரத்த வெள்ளத்தில் சூரியா சுருண்டு விழுந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இதையடுத்து பொதுமக்கள், சூரியாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சூரியாவை கொல்ல முயன்ற மர்ம நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

The APK installation was a breeze and the performance is top notch. Everything feels very responsive. Get the app at pkjjwinapk
I’ve tried a few sites lately but this one really stands out. The payout speed is impressive and the games are super smooth. Highly recommend 99jlcasino for anyone looking for a reliable spot.