கோவையில் பாஸ் ஸ்கேம் மூலமாக 50 லட்ச ரூபாய் மோசடி…
மர்ம நபர்கள் ஒரு புதிய தொலைபேசி எண்ணிலிருந்து ஊழியர்களின் வாட்ஸ்அப்பிற்கு மெசேஷ் அனுப்புகின்றனர். அதில், தாங்கள் தான் அந்த நிறுவனத்தின் முதலாளி என சாட் செய்கின்றனர்.மேலும், வாட்ஸ்அப்பில் முதலாளியின் படத்தை டிபி ஆகவும், முதலாளியின் பெயரும் வருவது போல ஹேக் செய்கின்றனர். தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் அவசர தேவை என்று கூறி உடனடியாக பணம் அனுப்புமாறு கேட்கின்றனர்.
தனது முதலாளியிடம் இருந்து தான் மெசேஜ் வருகிறது என நம்பி, உண்மை நிலையை சரிபார்க்காமல் ஊழியர்களும் அவர்கள் கேட்கும் பணத்தை வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி விடுகின்றனர். இவ்வாறு கோவை மாவட்ட போலீஸ் எல்லையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தில் ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் சார்பில் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது பாஸ் ஸ்கேமிற்கு ஆந்திராவை சேர்ந்த பப்புலா கிருஷ்ணா (40) அவரது உறவினர் சீனிவாச பப்புவா (42) ஆகியோர் உடந்தையாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்
கோவை மாவட்ட எல்லையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ.50 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பாஸ் ஸ்கேமை வாட்ஸ் அப்பை மையமாக கொண்டு மர்ம நபர்கள் செயல்படுத்தி வருகின்றனர். மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பை போன் மூலமாக ஹேக் செய்வது இல்லை. வாட்ஸ் அப் வெப் மூலம் வாட்ஸ் அப்பை இணைக்கும் போது மர்ம நபர்கள் வாட்ஸ் அப்பை ஹேக் செய்து விடுகின்றனர்.
அதன்பின் அவர்கள் ஒரு நிறுவனத்தின் பணிபுரியும் கணக்காளர்களை குறி வைக்கின்றனர். அவர்களுக்கு நிறுவனத்தின் முதலாளி போன்று சேட் செய்து மோசடியில் ஈடுபடுகின்றனர். ரு. 50 லட்சம் மோசடி நடந்த நிறுவனத்தின் கணக்காளர்களுக்கு மர்ம நபர்கள் அந்த நிறுவனத்தின் முதலாளியின் மகன் போன்று சேட் செய்துள்ளனர். கணக்காளர்களை சிந்திக்க விடாமல் தொடர்ந்து பணம் அவசரம், மிக பெரிய டீல் வந்துள்ளது என இடைவிடாமல் சேட் செய்துள்ளனர்.
இதனால் அந்த நிறுவனத்தின் கணக்காளர்கள் அந்த சேட் உண்மை என நம்பி நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்து ரூ. 50 லட்சத்தை அனுப்பி வைத்துள்ளனர். அதன்பின்னரே அவர்களுக்கு அது மோசடி நபர்கள் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கி கணக்குகளை வைத்து விசாரணை நடத்தி வந்தோம். அப்போது ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியை சேர்ந்த பப்புலா கிருஷ்ணா (40) அவரது உறவினர் சீனிவாச பப்புலா (42) ஆகியோரது வங்கி கணக்குகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது கண்டு பிடிக்காப்பட்டது.
இதையடுத்து போலீசார் ஆந்திரா விரைந்து செய்று பப்புலா கிருஷ்ணா மற்றும் சீனிவாச பப்புலா ஆகியோரை பிடித்து கோவை அழைத்து வந்தோம். தொடர் விசாரணையில் அவர்கள் தங்களது வங்கி கணக்கை மர்ம நபர்களுக்கு ரூ.2 லட்சத்திற்கு கமிஷனுக்கு கொடுத்து இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சைபர் மோசடிக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல ரூ.50 லட்சம் பரிவர்தனை செய்யப்பட்ட வங்கி கணக்குகளில் ரூ.16 லட்சம்
முடக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் கணக்காளர்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடமும்
விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறிஷம்.
ENG
BANC
