கோவையில் தமிழக முதல்வர்… போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு
தமிழக முதல்வர் விஜய் ஈரோடு விழாவில் கலந்து கொண்டு பின்னர் கோவைக்கு வந்தார் வரும் வழியில் அவர் கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் சென்று அங்கே ஆய்வு நடத்தினார். போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு மற்றும் விசாரணை விவரங்களை கேட்டு அறிந்தார்.
முதல்வர் விஜய், பதவி ஏற்ற நாளில் இருந்து இதுவரை கோவைக்கு 4 முறை வந்துள்ளார். ஒவ்வொரு முறையும் பீளமேடு விமான நிலையத்தில் இருந்து வேனில் வெளியே வருவார். மக்களை பார்த்து கை அசைத்தபடி ரோடு ஷோ செல்வார். ஆனால், இன்று முதல் முறையாக வேனை தவிர்த்துவிட்டு, காரில் புறப்பட்டு சென்றார்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு முதல்வர் விஜய் கோவை வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதியது. போக்குவரத்தும் ஸ்தம்பித்தது. ஆனால், தற்போது முதல்வர் வருகையின்போது மக்கள் கூட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. அதனால், இன்று வேனை தவிர்த்துவிட்டு காரில் சென்றார் முதல்வர் விஜய் வருகையையொட்டி மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என நினைந்து போலீசார், விமான நிலையம் பகுதி மற்றும் அவினாசி சாலையில் வழக்கம்போல் இரும்பு பேரிகாடுகள் அமைத்தனர். ஆனால் மக்கள் கூட்டம் இல்லாததால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
