கோவை கலெக்டர் அலுவலகத்தில் இளம் பெண் தற்கொலை முயற்சி…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு அதிகளவு பெண்கள் குவிந்து மனு அளித்தனர். சில பெண்கள் ஏற்கனவே நாங்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முறை மனு கொடுத்து விட்டோம். ஆனால் அந்த மனு தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த ஆண்டு கொடுத்த மனுக்களுக்கும் தீர்வு காணவில்லை.

எங்களது மனுக்களுக்கு 15 நாட்கள் கடந்த பின்னரும் பதில் வழங்கவில்லை என கேள்வி கேட்டனர். நிலம் அளவீடு செய்து தர வேண்டும் என சிலர் புகார் மனு அளித்தனர். சொத்து விவகாரம் பட்டா பிழை திருத்தம் தொடர்பாகவும் மனுக்கள் வந்தது. கடந்த காலங்களை விட தற்போது கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் சோதனை தீவிரமாக நடத்தப்பட்டது.

புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் தீவிரமாக சோதனை செய்யப்பட்ட பின்னரே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மனு கொடுக்க வந்த பிஎன் புதூர் பகுதியை சேர்ந்த ஜவுளி கடையில் ஊழியராக வேலை செய்து வரும் சித்ரா (26) என்பவர் டீசல் ஊற்றி தற்கொலை செய்ய முயற்சி செய்தார். போலீசார் உடனடியாக பாட்டிலில் இருந்த டீசலை பறிமுதல் செய்து சித்ராவை காப்பாற்றினர். இது தொடர்பாக சித்ரா கூறியதாவது

எனது முதல் கணவர் எங்கே சென்றார் என தெரியவில்லை. எனக்கு 12 ஆம் வகுப்பு படிக்கும் மகள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கிரில் ஒர்க் ஷாப் தொழிலாளியான அஜித்குமார் (36) என்பவரை நான் காதலித்து இரண்டாவது திருமணம் செய்தேன். அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார்‌.

அவர் வெளியூர் சென்று வேறொரு பெண்ணை நிச்சயம் செய்து திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் . எனது இரண்டாவது கணவருக்காக நான் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷனை நீக்கி மறுபடியும் ஆபரேஷன் செய்து கொண்டேன். ஆனால் எனது கணவர் என்னிடம் இருந்த பணம் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றி சென்று விட்டார் . அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசில் அவர் மீது நான் புகார் கொடுத்தேன் ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவில்லை. நான் பலமுறை முயற்சி செய்தும் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் என்னைப் உள்ள பெண்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் தற்கொலை செய்ய இங்கே வந்தேன். என்னை போல் யாரும் ஏமாறக்கூடாது என தெரிவிக்கும் வகையில் தான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன் என்றார். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *