சிறுவாணி அணையில் தூர் எடுப்பு
மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி அணை 22.46 சதுர கிலோமீட்டர் பரப்பில் நீர்த்தேக்க திறனுடன் அமைந்துள்ளது.
இந்த அணை கடந்த 1982 ஆம் ஆண்டு கட்டப்பட்டது . அதிலிருந்து இப்போது வரை அணை தூர்வாரப்படவில்லை . அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 15 மீட்டர் அணையில் இருந்து தினமும் 10 கோடி லிட்டர் குடிநீர் பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் அணையின் நீர்மட்டம் உச்ச அளவை எட்டாமல் இருப்பதால் முழு அளவில் குடிநீர் எடுக்க முடியாத நிலைமை இருக்கிறது.
கேரளா அரசு அணையின் பக்க சுவர் பழுதடைந்து இருக்கிறது நீர் கசிவு ஏற்படுகிறது இதனை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தது. இதைத்தொடர்ந்து தமிழகத்திடம் அணை பராமரிப்புத் தொகை மற்றும் நீர்க்கசிவு அடைப்பு பணிகளுக்காக 25 கோடி ரூபாய் கேட்டது இந்த தொகையை வழங்குவதற்காக குடிநீர் வடிகால் வாரியம் ஒப்புதல் கொடுத்துள்ளது.
தற்போது குடிநீர் வடிகால் வாரியத்திடம் தொகை இல்லாத நிலையில் கோவை மாநகராட்சியிடம் ஏற்கனவே பாக்கி உள்ள குடிநீர் கட்டணத் தொகையை விரைவாக வழங்கும்படி கேட்டு இருக்கிறது. விரைவில் சிறுவாணி அணை நீர் கசிவு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்தனர் .
கடந்த சில நாட்களுக்கு முன் சிறுபான்மை அணை தூர்வாரி சீரமைக்கப்பட்டது. குறிப்பாக நீர் ஏற்று நிலையம் மற்றும் அணையின் பக்க சுவர் அருகே உள்ள சேறு சகதி வண்டல் மண் போன்றவை தூர் எடுக்கப்பட்டது. இந்த சகதி மண் அனைத்தும் கரையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. சிறுவாணி அணை நீர் தேக்கம் செம்மண் பூமியில் அமைந்துள்ளது. இதில் அதிக அளவு தகுதி இல்லாவிட்டாலும் சில இடங்களில் புதைமண் காணப்படுகிறது. எனவே 3 முதல் 6 அடி ஆழம் வரை அணையின் நீர்த்தேக்க பகுதியில் முழுவதும் தூர்வாரி சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
