கோவையில் 10, 12 மதிப்பெண் சான்று விரைவாக வாங்க அறிவுறுத்தல்…

கோவை மாவட்ட எல்லைக்கு உட்பட்ட தனித்தேர்வு மையங்களில் மார்ச் 2023 ஜூன், ஜூலை, மார்ச் 2024 மற்றும் ஜூன், ஜூலை 2024 ஆகிய பருவங்களில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு

பொதுத்தேர்வு எழுதிய தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு மதிப்பெண் சான்றிதழ்கள் அத்தேர்வு மையங்கள் மூலம் தேர்வர்களுக்கு நேரடியாக விநியோகம் செய்யப்பட்டது. தேர்வு மையத்தில் நேரடியாக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாத தனித்தேர்வர்களின் பத்தாம் வகுப்பு

மற்றும் மேல்நிலை மதிப்பெண் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் மீளப்பெறப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக தனித்தேர்வர்களால் பெற்றுக்கொள்ளாமல் இருக்கும் மார்ச் 2023, ஜூன், ஜூலை 2023, மார்ச் 2024 மற்றும் ஜூன் ஜூலை 2024 ஆகிய பருவங்களுக்குரிய பத்தாம் வகுப்பு. மேல்நிலை முதலாமாண்டு மற்றும் மேல்நிலை இரண்டாமாண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பத்துடன்

இணைத்து அனுப்பிய தேர்வரால் பெறப்படாமலிருக்கும் அசல் சான்றிதழ்கள் இவ்வலுவலகத்தில் உள்ளன. தேர்வுத்துறை விதிமுறைகளின்படி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு 2 வருடங்கள் கழித்து தனித்தேர்வர்களால் பெறப்படாத மதிப்பெண் சான்றிதழ்கள் அனைத்தும் அழிக்கப்பட வேண்டும்.

எனவே, குறிப்பிட்ட பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை பெறாத தனித்தேர்வர்கள் இந்த அறிவிப்பு வெளியிடப்படும் நாளில் இருந்து 90 நாட்களுக்குள் இவ்வலுவலகத்தை அலுவலகப் பணி நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் நேரில் அணுகியோ அல்லது 70 ரூபாய் மதிப்புள்ள அஞ்சல்வில்லை ஒட்டிய சுய முகவரி எழுதப்பட்ட உறையுடன் தேர்வரின்

கையொப்பமிடப்பட்ட கோரிக்கைக் கடிதம் மற்றும் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின் அச்சுப்பகர்ப்பு நகலை இணைத்து இவ்வலுவலகத்திற்கு அனுப்பியோ உரிய மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டும். தவறினால் தேர்வுப் பருவங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி அழிப்பதற்கு இவ்வலுவலகத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *