கோவையில் வியாபாரி வீட்டில் கொள்ளை

பூட்டை உடைத்து வடமாநில வியாபாரி வீட்டில் கொள்ளையடித்த திருடர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுனில்குமார் (31). இவர் கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நடராஜ் நகர் 2-வது வீதியில் குடும்பத்துடன் தங்கி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் சுனில்குமார் தனது வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான ராஜஸ்தானுக்குச் சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் தங்க நகைகளைக் கொள்ளையடித்துக் தப்பிச் சென்றனர்.

கோவைக்கு திரும்பிய சுனில்குமார், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு நகைகள் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கவுண்டம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதையடுத்து போலீசார் சுனில்குமார் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

2 thoughts on “கோவையில் வியாபாரி வீட்டில் கொள்ளை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *