கோவையில் 8463 தபால் ஓட்டு பதிவு…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் மாற்று திறனாளிகள் மற்றும் 85 வயது கடந்தவர்கள் தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டது.

இதன்படி மாவட்ட அளவில் 85 வயதிற்கு மேற்பட்ட 7583 வாக்காளர்கள், 1692 மாற்று திறனாளிகள் தபால் ஒட்டு போட விண்ணப்ப படிவம் 12 டீ பூர்த்தி செய்து தந்தனர். இவர்களுக்கு ஏற்கனவே தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது.

கடந்த 3 நாட்களாக தபால் ஓட்டு சீட்டு மாவட்ட அளவில் பெறும் பணி நடந்தது. இதற்காக 163 குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் 85 வயது கடந்த 6863 வாக்காளர்கள் தபால் ஓட்டு சீட்டு பூர்த்தி செய்து தபால் ஓட்டு பெட்டியில் தேர்தல் அலுவலர்கள் முன்னிலையில் பெட்டியில் போட்டனர் .

இதேபோல் 1600 மாற்று திறனாளி வாக்காளர்கள் தங்களது தபால் ஓட்டுக்களை வழங்கினர். மாவட்ட அளவில் தபால் ஓட்டு சீட்டு பெற்ற 9545 வாக்காளர்களில், 8463 வாக்காளர்கள் ஒட்டு பதிவு செய்தனர். விடுபட்டவர்கள் இனி தபால் ஓட்டு போட முடியாது. ஆனால் இவர்கள் வரும் 23ம் தேதி தேர்தலின் போது ஒட்டு சாவடிக்கு சென்று ஒட்டுக்களை பதிவு செய்யலாம் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *