கோவை கோவை மாவட்டத்தில் மகளிர், யூத் ஓட்டு சாவடிகள்…!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகள் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.
இதில் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் பவன்குமார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள், 183 சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் இருக்கிறது.
இந்த ஓட்டு சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும். குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல், மருத்துவ குழு தயாராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குடிநீர், கழிவறை, மின்விளக்கு, சாய்வு தளம் போன்றவை முறையாக செய்திருக்க வேண்டும்.
வாக்காளர்களை ஒட்டு போட அதிக நேரம் வெயிலில் நிற்க வைக்க கூடாது. நிழற்கூரை வசதியில்லாத ஓட்டு சாவடிகளில் சாமியானா பந்தல் போட வேண்டும். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஒட்டு போட வரும் போது மயக்கம் போட்டு விட்டால் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவ உதவி குழு தயாராக இருக்க வேண்டும். ஒட்டு சாவடிகளின் சுற்றுப்பகுதிகளில் முட்புதர் செடிகள் இருக்கக் கூடாது.
சுத்தம் செய்து நல்ல முறையில் பராமரித்திருக்க வேண்டும். வன எல்லைப் பகுதியில் உள்ள ஒட்டு சாவடிகளில் யானை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் இருக்கிறதா என வனத்துறையினர் உதவியுடன் சோதனை செய்து பார்க்க வேண்டும்.
அபாய பகுதியில் உள்ள ஒட்டு சாவடிகளில் பாதுகாப்பு வசதிகளை செய்ய வேண்டும். ஒட்டு சாவடிக்கு சென்று வரும் பாதைகளை சரி செய்ய வேண்டும். முறையான பராமரிப்பு இல்லாத ஒட்டு தொடர்பாக சாவடிகள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒட்டு சாவடிகளுக்கு வரிசை எண், பாகம் எண் எழுத வேண்டும். ஓட்டு சாவடிகளை முறையாக பராமரிக்காத நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் ஒரு மாதிரி ஒட்டு சாவடியும், மகளிர் மட்டுமே பணி செய்யும் மகளிர் மட்டும் ஒரு ஒட்டு சாவடியும், 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் மட்டுமே பணியாற்றும் ஒரு ‘யூத்’ ஒட்டு சாவடியும் அமைக்க வேண்டும்.
இந்த தேர்தல் எஸ்ஐஆர் பணிக்கு பின்னர் நடத்தப்படவுள்ளது. எனவே ஓட்டு சாவடியை தேர்தல் விழாவாக நடத்தும் வகையில் அருமையாக உருவாக்க வேண்டும் என ஒட்டு சாவடி தயார் செய்யும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
