கோவை மாவட்டத்தில் தேர்தல் ஏற்பாடுகள் தயார்…

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் வரும் 23ஆம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

பத்து தொகுதிகளுக்கு 15223 ஓட்டு பதிவு மிஷின்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டு ஓட்டு பதிவு மிஷின்கள் பயன்படுத்தப்படும்.

கோவை மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள் சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள் கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள் தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள், பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 5 வேட்பாளர்கள் என 188 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

16 வேட்பாளர்களுக்கு அதிகமாக இருந்தால் 2 ஒட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்) தேவை. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், கோவை வடக்கு, தொண்டாமுத்தூர், கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் இரண்டு ஓட்டு பதிவு மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது.

மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தொகுதிகளில் 6328 ஓட்டு பதிவு மெசின்கள் (இவிஎம்), 4272 கன்ட்ரோல் யூனிட்டுகள், 4628 சின்னம் காட்டும் மெசின்கள் என 15,223 மெசின்கள் பயன்படுத்தப்படவுள்ளது. 6323 மெசின்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் அடங்கிய தாள் (பேலட் பேப்பர்) பொருத்தப்பட்டுள்ளது.

சட்டமன்ற தொகுதி வாரியாக அதற்கென ஒதுக்ககப்பட்ட ஸ்டிராங்க் ரூம்களில் இந்த மெசின்கள் வைக்கப்பட்டிருக்கிறது. வரும் 22ம் தேதி இந்த மெசின்கள் முறையாக எடுக்கப்பட்டு ஓட்டு சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மாவட்ட அளவில் ஓட்டு மெசின்கள் ஆவணங்கள் கொண்டு இதற்காக பிரத்யேகமான வாகனங்கள் தயார் செய்யப்பட்டிருக்கிறது. 15 முதல் 20 ஓட்டு சாவடிகளுக்கு ஒரு வாகனம் என ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது ஓட்டு மெசின் மற்றும் ஒட்டு சாவடிகளில் பயன்படுத்தப்படும் 87 வகையான ஆவணங்கள் அடங்கிய பேக் அனுப்பி வைக்கப்படும்.

ஓட்டு மெசின்களில் ரகசிய பேப்பர் ஓட்டப்பட்டிருக்கும். இந்த பேப்பர் இருந்தால் தான் அது ஒரிஜினலாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மெசின் என அர்த்தம் டம்மி, ரிசர்வ் மெசின்களை ஓட்டு பதிவுக்கு பயன்படுத்த கூடாது.

பெல் குழு தயார்

ஓட்டு மெசின்கள் மக்கர் செய்தால் சரி செய்ய பெங்களூரில் இருந்து பாரத் ஹெவி எலக்ட்ரானிக் கார்ப்பரேஷனில் (பெல்) இருந்து 20 பேர் கொண்ட குழு கோவை வந்துள்ளது. இந்த குழுவினர். மெசின்களை பராமரித்து முறையாக அனுப்பி வைப்பார்கள் மெசின்களில் சார்ஜபுள் பேட்டரி கிடையாது.

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாள் இந்த பேட்டரிகளுடன் மெசின்கள் அனுப்பி வைக்கப்படும். பேட்டரி, பட்டன்களில் பிரச்னை என்றால் பெல் குழுவினர் சரி செய்வார்கள். சரி செய்ய முடியாவிட்டால் ரிசர்வ் மெசின்கள் பயன்படுத்தப்படும். ஒட்டு பதிவு பகுதி அளவு நடந்திருந்தால் பழைய மெசின்கள் தனியாக வைக்கப்படும். ஓட்டு எண்ணிக்கையில் இந்த மெசினில் பதிவான ஓட்டுக்கள் கட்டாயம் எண்ணப்படும்.

கன்ட்ரோல் ரூம் ரெடி

ஓட்டு பதிவுகளை கலெக்டர் அலுவலகத்திலிருந்து காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தொகுதி வாரியாக மாவட்ட தேர்தல் பிரிவு மட்டுமின்றி இந்திய தேர்தல் கமிஷன் அலுவலகத்திலும் ஓட்டு பதிவு வளாகம் ஓட்டு பதிவு விவரங்களை நேரடி ஒளிபரப்பு மூலமாக காண ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

அனைத்து ஓட்டு சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. நேரடியாக இந்த காட்சிகளை தேர்தல் பிரிவினார் காண முடியும். 16 ஆயிரம் போலீசாருக்கு பணி: 3563 ஓட்டு சாவடிகளுக்கு ஒரு போலீசார், ஒரு ஊர்காவல் படையினர், ஒரு தன்னார்வலர் பணியில் இருப்பார்கள் சென்சிடிவ் ஒட்டு சாவடிகளில் துணை ராணுவ படையினர் பணியில் இருப்பார்கள் .

மொத்தமாக மாநகர், மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியில் இருப்பார்கள். 22ம் தேதி ஓட்டு மெசின் எடுப்பதில் இருந்து ஒட்டு எண்ணிக்கை மையத்தில் மெசின்கள் ஒப்படைக்கும் வரை தொடர்ந்து போலீசார் பணி செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *