கோவை மாவட்டத்தில் பள்ளி செல்லாத (drop out ) 3349 மாணவர்கள் குறித்து விசாரணை…!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளி வராத மாணவ மாணவிகள் (School drop out) தொடர்பான ஆய்வு கூட்டம் இன்று நடந்தது.

இதில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி கணக்கெடுப்பின் படி, மாவட்ட அளவில் 3349 மாணவ மாணவிகள் பள்ளிக்கு வராமல் நின்று விட்டதாக அறிக்கை ஒப்படைக்கப்பட்டது. அதுவும் அரசு மற்றும் அரசு சார்பு பள்ளிகளில் படித்த இந்த மாணவ மாணவிகள் வராமல் இடை நின்று விட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் 768 துவக்க பள்ளிகள், 257 நடுநிலைப்பள்ளிகள், 249 உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1274 பள்ளிகள் இருக்கிறது. பல லட்சம் மாணவ மாணவிகள் கல்வி கற்கின்றனர். கோவை மாவட்டத்தில் தொடக்க கவ்வி கூடங்களில் 756 மாணவர், 606 மாணவியர் என 1371 பேர் நடப்பு ஏப்ரல் மாத கணக்கின் படி பள்ளிக்கு வரவில்லை.

கோவை கல்வி மாவட்ட அளவில் 661 மாணவர்கள், 351 மாணவிகள் என 1012 பேர் பள்ளிக்கு வரவில்லை. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அளவில் 322 மாணவர்கள், 193 மாணவிகள் என 515 பேர் பள்ளிக்கு வராமல் நின்று விட்டனர். பொள்ளாச்சி தொடக்க கல்வி மாவட்ட அளவில் 231 மாணவர், 220 மாணவியர்கள் என 451 பேர் பள்ளிக்கு வராமல் இருப்பதாக தெரியவந்தது.

வராதவர்களில் கோவை மாவட்ட தொடக்க கல்வி வட்டாரங்களில் 40.90 சதவீதம் அளவிற்கும், கோவை கல்வி மாவட்டத்தில் 30.22 சதவீதம் அளவிற்கும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 215.38 சதவீதம் அளவிற்கும், தொடக்க கல்வி மாவட்ட அளவில் 13.47 சதவீதம் அளவிற்கும் மாணவ மாணவிகள் இடை நிற்றல் இருப்பதாக கண்டறியப்பட்டது.

அனைத்து வட்டாரங்களில் இடைநிற்றல் தொடர்பான ஆய்வில் 16:35 பேர் ஏன் பள்ளிக்கு வராமல் நின்றார்கள் என கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது. சூலூர் வட்டாரத்தில் 152 பேர், காரமடையில் 104 பேர், எஸ்எஸ் குளத்தில் 97 பேர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு வராத 992 மாணவர்கள், 722 மாணவிகள் என மொத்தம் 1714 பேர் ஏன் வரவில்லை என காரணம். தெரிவிக்கப்பட்டது.

எல்கேஜியில் 125 பேர், யுகேஜியில் 174 பேர் முதல் வகுப்பில் 358 பேர், 2ம் வகுப்பில் 257 பேர் 3ம் வகுப்பில் 241 பேர், 4ம் வகுப்பில் 212 பேர், 5ம் வகுப்பில் 193 பேர், 6ம் வகுப்பில் 285 பேர். 7ம் வகுப்பில் 336 பேர், 8ம் வகுப்பில் 464 பேர், 9ம் வகுப்பில் 510 பேர், 10ம் வகுப்பில் 161 பேர், 11ம் வகுப்பில் 14 பேர், 12ம் வகுப்பில் 14 பேர் என 3349 பேர் பள்ளிக்கு வராமல் நின்று விட்டனர்.

இது தொடர்பாக கலெக்டர், பள்ளி கல்வித்துறையினரிடம் விவரங்கள் கேட்ட போது உடல் நலன் குறைவினால் 861 பேர் பள்ளிக்கு வரவில்லை. குடும்பத்தினர் இட பெயர்ச்சி காரணமாக 224 பேர், பெற்றோர்களின் உடல் நலன் குறைவினால் 150 பேர், படிக்க விருப்பமின்மையால் 141 பேர், இதர

காரணங்களினால் 94 பேர், பொருளாதார சூழல் காரணமாக 63 பேர், தங்கும் இடத்தில் உள்ள பிரச்னையால் 33 பேர், பள்ளிக்கு வந்து செல்வதில் இடர்பாடு காரணமாக 23 பேர், பெற்றோர் இன்றி இதர நபர்களின் பாதுகாப்பு பிரச்னையால் 13 பேர் பெற்றோர் பாதுகாவலர் உதவியின்றி 11 பேர், அடிக்கடி கூடாரங்களில் தங்கி இடம் பெயர்ந்து வாழும் குடும்பத்தினரால் 10 பேர், பெற்றோர் இறப்பினால் 5 பேர்,

குழந்தை தொழில் காரணமாக 2 பேர், திருநங்கை பிரச்னையால் 2 பேர் என 1714 பேர் பள்ளிக்கு வரவில்லை என விளக்கம் தரப்பட்டது. வரும் ஜூன் மாதம் பள்ளிகளில் முழு அளவில் மாணவ மாணவிகள் சேர்க்கை இருக்க வேண்டும். பள்ளிகளில் இடைநிற்றல் தடுக்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *