கோவை மாவட்டத்தில் 183 வேட்பாளர்கள் போட்டி, 20 பேர் வாபஸ்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் நடந்தது.

இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்தூரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும், சிங்காநல்லூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும்,

வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் மேட்டுப்பாளையத்தில், 26 மனுக்கள் ஏற்கப்பட்டது. சூலூரில் 17 வேட்பு மனுக்களும், கவுண்டம்பாளையத்தில் 17 மனுக்களும், கோவை வடக்கில் 29 மனுக்களும், தொண்டாமுத்தூரில் 22 மனுக்களும், கோவை தெற்கில் 38 மனுக்களும், சிங்காநல்லூரில் 29 மனுக்களும், கிணத்துக்கடவில் 5 மனுக்களும், பொள்ளாச்சியில் 14 மனுக்களும், வால்பாறையில் 6 மனுக்களும் இறுதி செய்யப்பட்டது.

மாவட்ட அளவில் 203 மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் பிரிவினர் அறிவித்தனர். இதில் 249 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று வரை வேட்பு மனுக்கள் வாபஸ் வாங்க அவகாசம் வழங்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் 4 வேட்பாளர்கள், சூலூரில் 2 பேர், கவுண்டம்பாளையத்தில் 3 பேர், கோவை வடக்கில் ஒருவர், தொண்டாமுத்தூரில் ஒருவர்,

கோவை தெற்கில் 7 பேர், சிங்காநல்லூரில் ஒருவர், பொள்ளாச்சியில் ஒருவர் வாபஸ் பெற்றனர். கிணத்துக்கடவு, வால்பாறையில் யாரும் வாபஸ் பெறவில்லை. மொத்தம் 20 பேர் வாபஸ் பெற்றனர்.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் 22 வேட்பாளர்கள், சூலூரில் 15 வேட்பாளர்கள், கவுண்டம்பாளையத்தில் 14 வேட்பாளர்கள், கோவை வடக்கில் 28 வேட்பாளர்கள், தொண்டாமுத்தூரில் 21 வேட்பாளர்கள், கோவை தெற்கில் 31 வேட்பாளர்கள், சிங்காநல்லூரில் 28 வேட்பாளர்கள், கிணத்துக்கடவில் 5 வேட்பாளர்கள்,

பொள்ளாச்சியில் 13 வேட்பாளர்கள், வால்பாறையில் 6 வேட்பாளர்கள் என 183 வேட்பாளர்கள் இறுதி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு உரிய ஒதுக்கீடு சின்னமும், மற்றவர்களுக்கு சுயேட்சைகளுக்கான சின்னமும் தேர்தல் பிரிவினர் வழங்கினர்.

நாளை வேட்பாளர்கள் பெயர், சின்னத்துடன் கூடிய பேலட் பேப்பர் அச்சடிக்கும் பணி நடத்தப்படும். வரும் 12ம் தேதி ஓட்டு மெசின்களில் பேலட் பேப்பர் பொருத்தும் பணி நடத்தப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர். மேலும் வரும் 12ம் தேதி முதல் தபால் ஓட்டு போடலாம் வாய்ப்பு தரப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *