கோவை மாவட்டத்தில் 2 நாளில் நாளில் 27 பேர் வேட்பு மனு தாக்கல்

கோவை மாவட்டத்தில் கடந்த 30ம் தேதி வேட்பு மனு தாக்கல் துவங்கியது.

அதற்கு பின்னர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளில் அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மாவட்ட அளவில் 27 பேர் மனு தாக்கல் செய்தனர். தொண்டாமுத்தூரில் நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் உள்பட 9 பேர் மனு தாக்கல் செய்தனர்.

பொள்ளாச்சியில் 5 பேர் மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 22 ஆண்கள், 5 பெண்கள் என 27 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். முதல் நாளில் 15 பேர் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடதக்கது.

பெரும்பாலானவர்கள் சுயேட்சையாக மனு தாக்கல் செய்தனர். நாம் தமிழர் கட்சியில் சிலர் மாற்று வேட்பாளராக மனு தாக்கல் செய்தனர். கோவை வடக்கில் தமிழக வெற்றி கழக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் பிரிவினர் கூறுகையில், ” மனு தாக்கல் செய்த விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு தவறுகள் சுட்டி காட்டி சரி செய்ய உதவி செய்யப்பட்டது. 3ம் தேதி அரசு விடுமுறை நாள், வரும் 4ம் தேதி மற்றும் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்யலாம், ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *