கோவை ரயில் நிலையத்தில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்த இரண்டு பேர் கைது…
கோவை ரயில் நிலையம் வழியாக கஞ்சா கடத்தல் அதிகமாக நடப்பதாக புகார் வந்தது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை போலீ சார் தொடர்ந்து தீவிரமாக சோதனை செய்து வந்தனர் .
நேற்று மாலை கோவை ரயில் நிலையத்தின் முதல் பிளாட்பாரம் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனை நடத்தினர் .
அப்போது
அந்த வழியாக பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் (27) மற்றும் பாலக்காடு பகுதியை சேர்ந்த சிந்து (37) ஆகியோர் வைத்திருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 12 கிலோ எடையில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இருவரையும் பிடித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் வசம் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு செய்த போலீசார் கஞ்சா தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
வட மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வந்து கோவை மற்றும் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. ஒரு கிலோ கஞ்சா 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும் அதிக விலை கிடைப்பதால் இதனை வாங்க கடும் போட்டி இருப்பதாக கூறப்படுகிறது .
கஞ்சா கடத்தல் பின்னணியில் உள்ள மற்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல் கோவை நகரில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
