சேற்றில் விழுந்து உயிருக்கு போராடும் யானை..

கோவை தொண்டாமுத்தூர் குப்பனூர் கிராமத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெண் யானை ஒன்று சுற்றி சுற்றி வந்தது. நடக்க முடியாமல் தள்ளாடிய அந்த யானை இன்று காலை நீர் தொட்டி அருகே உள்ள சேற்றில் கால் வைத்து தடுமாறி கீழே விழுந்தது.

அதற்குப் பிறகு யானையால் எழுந்திருக்க முடியவில்லை. இது தொடர்பாக கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஜேசிபி மூலமாக சேறு இருந்த பகுதியை அகற்றி யானையை எழ வைக்க முயன்றனர். ஆனால் யானையால் எழுந்து நடக்க முடியவில்லை.

உடல் நலக்குறைவால் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது. யானைக்கு தீவிர சிகிச்சை தர வேண்டும். யானை உடல் நலம் பாதிக்கப்பட்டிருப்பது முன்கூட்டியே தெரிந்தும் வனத்துறையினர் அதனை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை என அந்தப் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

3 thoughts on “சேற்றில் விழுந்து உயிருக்கு போராடும் யானை..

Leave a Reply to hm88com Cancel reply

Your email address will not be published. Required fields are marked *