தாம்பூல தட்டில் சில்லரை காசுகள் கொண்டு வந்து மனு தாக்கல் செய்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்…

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் உச்சகட்டத்தை எட்டி இருக்கிறது.
மாவட்ட அளவில் 10 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் துவங்கியிருக்கிறது.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் இதுவரை 24 பேர் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாமினேஷன் படிவம் 2 பி வாங்கி சென்றிருக்கிறார்கள். இதில் காங்கிரஸ் சார்பில் கோவை செல்வன், ஆம் ஆத்மி பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் படிவம் வாங்கி சென்றிருக்கிறார்கள்

சசிகலா கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் கே ஏ ஆதிநாராயணன் நாமினேஷன் படிவம் வாங்கி சென்று இருக்கிறார்.

இன்று மதியம் கோவை தெற்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பேரறிவாளன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் தொகையை பத்து ரூபாய் காசு மற்றும் பத்து ரூபாய் நோட்டுகளுடன் ஊர்வலமாக வந்து மனு தாக்கல் செய்தார். டெபாசிட் தொகையை தாம்பூல தட்டில் வைத்து அவர் கொண்டு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

கவுண்டம்பாளையம் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஏர் கலப்பையுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார் சிங்காநல்லூர் தொகுதியில் மாட்டு வண்டியில் வந்து வேட்பாளர் நேரு வேட்பு மனு தாக்கல் செய்தார். வித்தியாசமாக மனு தாக்கல் செய்து இவர்கள் பப்ளி சிட்டி ட்ரெண்ட் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *