முதலமைச்சர் நாளை கோவை வருகை… பெரியார் அறிவாலயம் திறப்பு விழா…!

கோவை காந்திபுரம் சிறைச்சாலை நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் 6.98 ஏக்கர் பரப்பளவில் 7 மாடிகளில் ‘பெரியார் அறிவுலகம்’ என்ற பெயரில் பிரமாண்ட நூலகம், தகவல் தொழில்நுட்ப அரங்கம் அமைக்கும் பணி, கடந்த திமுக ஆட்சியில் நடந்தது. சுமார் 300 கோடி ரூபாய் செலவில் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் அசத்தலான தோற்றத்தில் பொதுப்பணித்துறை சார்பில் இந்த கட்டமைப்பு உருவடிக்கப்பட்டுள்ளது.

இந்த 7 மாடி வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 சீட் உள்ள கலையரங்கம், அறிவியல் மையம் கோளரங்கம் ஆகியவை உருவாக்கப்பட்டது முதல் தளத்தில் அறிவியல் மையம், 2வது தளத்தில் சிறுவர் நூலகம் சய வாசிப்பு பிரிவு, மூன்றாம் தளத்தில் போட்டித்தேர்வு நூலகம் மற்றும் நிர்வாக அலுவலகங்கள் 4வது களத்தில் தமிழ் புத்தகங்களும் பருவ இதழ்களும் கொண்ட பகுதி 5 மற்றும் 6 வது தளத்தில் ஆங்கில புத்தக பிரிவு புத்தாக்க மையங்களும் தயார் செய்யப்பட்டுள்ளது.

7வது தளத்தில் அறிவியல் மையம், நூலகம் மற்றும் ஏஐ செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் போன்ற தொழில்நுட்ப காட்சியகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழாவில் பங்கேற்க முதல்வர் விஜய் சென்னையில் இருந்து விமானம் மூலம் நாளை கோவை வருகிறார்.

காலை 11 மணிக்கு தனி விமானத்தில் கோவை பீளமேடு விமான நிலையம் வருகை தரும் அவர், மதியம் 11.50 மணிக்கு பெரியார் அறிவுலக கட்டடம் வந்தடைகிறார். ரோடு ஷோ மூலமாக விமான நிலையம் முதல் காந்திபுரம் வரை சுமார் 12 கி.மீ தூரம் ரோட்டோரம் காத்திருக்கும் மக்களை சந்திக்கிறார்.

இதற்காக ரோட்டின் இருபுறமும் இரும்பு பேரிகார்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாக முதல்வர் வாகனம் வரும்போது ரோட்டின் இரு பகுதியிலும் மக்கள் நின்று முதல்வரை காண வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதியம் 11.50 மணிக்கு பெரியார் அறிவுலகம் கல்வெட்டு திறப்பு, பெரியார் சிலை திறப்பு நடத்தப்படுகிது. பின்னர், வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், புத்தகம் படிக்கும் அறை, அறிவியல் மையம், டி ஜிட்டல் நூலகம் போன்றவற்றை முதல்வர் 20 நிமிடம் பார்வையிடுகிறார். பின்னர் விழா மேடையில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பல்வேறு அரசுத்துறைகள் சார்பில் 100 பயனாளிகளுக்கு மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.

மதியம் 1.05 மணிக்கு விழா நிறைவுபெறுகிறது. அதன்பின், முதல்வர் காரில் அவினாசி ரோடு பி.ஆர்.எஸ். வளாகம் செல்கிறார் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் திருச்சூர் செல்கிறார். அங்கு, கிருஷ்ணர் கோவிலில் வழிபாடு நடத்திவிட்டு, அதே ஹெலிகாப்டர் மூலம் கோவை பீளமேடு விமான நிலையம் வருகிறார். இங்கிருந்து தனி விமானத்தில் மீண்டும் சென்னை திரும்புகிறார்.

முதல்வர் வருகையையொட்டி, நகரில் சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழா மேடை அருகே டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வருகை காரணமாக நகரில் அவர் பயணிக்கும் பாதையில் சாக்கடை கால்வாய் அடைப்பு நீக்கி, சுத்தம் செய்தல், தார்ச்சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதியில் தடையின்றி மின்சாரம் சப்ளை செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

5 thoughts on “முதலமைச்சர் நாளை கோவை வருகை… பெரியார் அறிவாலயம் திறப்பு விழா…!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *