ரேஷனில் கோதுமையை விட அரிசிக்கு தான் மவுசு…
கோவை மாவட்டத்தில் 11.42 லட்சம் ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த கார்டுகளுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமை மட்டுமே ஒதுக்கீடு செய்து தரப்பட்டு வந்தது. இந்த கோதுமை போதுமானதாக இல்லை ரேஷன் அரிசியை சற்று குறைத்து விட்டு அதற்கு பதிலாக இலவசமாக கோதுமை கூடுதலாக வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.
குறிப்பாக ஒரு ரேஷன் கார்டுக்கு 5 கிலோ கோதுமை ஒதுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். மாவட்ட அளவில் இப்போது ஒதுக்கீடு செய்யும் அளவை விட கூடுதலாக 5 மடங்கு ஒதுக்கி தரவேண்டும் என கோரிக்கை விடப்பட்டது கோவை மாவட்டத்தில் வடமாநில தொழிலாளர்கள் அதிகமாக வசிக்கின்றனர். இவர்களில் பலர் ரேஷன் பொருட்களை தங்களது கார்டுகளுக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அரிசியை காட்டிலும் கோதுமையை வாங்க ஆர்வம் காட்டுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு கோதுமை ஒதுக்கீட்டை அதிகப்படுத்தியது. ஒரு கார்டிற்கு 5 கிலோ வரை கோதுமை வழங்க ஒப்புதல் தரப்பட்டது. ஆனால் மாவட்ட அளவில் கோதுமை வாங்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை. சில பகுதிகளில் கோதுமை வாங்கினாலும் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் அரிசியை தான் முழுமையாக வாங்கி செல்வதாக தெரியவந்தது. கோவை மக்கள் கோதுமைக்கு முக்கியத்துவம் தராமல் தொடர்ந்து ரேஷன் அரிசியை அதிகளவு வாங்கி வருகிறார்கள். கூடுதல் கோதுமையை வாங்க யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. தேவைப்பட்டவர்கள் வாங்குகிறார்கள் என மாவட்ட வழங்கல் பிரிவினர் தெரிவித்தனர்.

Found this site through a friend and it is actually legit. The game variety is impressive and it runs great on my mobile. Give phpunph a try today.
Sangat puas main di sini, proses deposit dan withdraw sangat cepat. Mantap sekali pelayanan dari idkudaemas88, recommended banget buat semua.