அகில இந்திய தொழில் தேர்வு…

அகில இந்திய தொழிற்தேர்வுக்கு அக்.9ம் தேதிக்குள் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் கோவை, அக் கைவினைஞர் பயிற்சி திட்டத்தின் கீழ் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக பங்கேற்க விரும்பும் தேர்வர்கள் வரும் 9-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி பொது இயக்குனரகம் (டிஜிடி) மூலம் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தில் வரும் 2027-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் அகில இந்திய தொழிற்தேர்வில் நடத்தப்பட உள்ளது. இதில், தனித் தேர்வர்களாக கலந்து கொள்ள தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

தேர்வு கட்டணமாக ரூ.200-ஐ www.karuvoolam.tn.gov.in என்ற என்ற இணையதளத்தின் வழியாக இ-சேலான் மூலம் செலுத்தி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத் தேர்வு வரும் நவம்பர் 26-ம் தேதி கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு நவம்பர் 27ல் நடைபெறும்.

இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். தனித்தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டு வரும் நிலையில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க வரும் அக்டோபர் 9-ம் தேதி கடைசி என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

4 thoughts on “அகில இந்திய தொழில் தேர்வு…”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *