வேட்பாளர்களை கண்காணிக்க வீடியோ குழு…
கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
மனு தாக்கல் செய்த பின்னர் அவர்கள் யாரை சந்தித்தாலும், பேசினாலும் அது பிரச்சாரம் என தேர்தல் பிரிவினர் கருதுவார்கள். வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில், சென்று வரும் பகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு. படையினர், வீடியோ கண்காணிப்படையினர் பின் தொடர்ந்து கண்காணிப்பார்கள்,
சோதனை செய்வார்கள். பிரச்சாரம் தொடர்பான வீடியோ பதிவுகளை தவறாமல் செய்ய உள்ளனர். குறிப்பாக வாக்காளர்களுக்கு உணவு மற்றும் பல்வேறு பொருட்களை கொடுத்தால் அதை வீடியோ பதிவு செய்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
வேட்பாளராக போட்டியிடுபவர் காலை முதல் அவர் தூங்க செல்லும் நேரம் வரை களத்தில், பொதுமக்களிடம் என்னென்ன செய்கிறாய், பேசுகிறார் என்பதை முழுமையாக கண்காணித்து அதை வீடியோ ஆதாரங்களுடன் ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் பிரிவு உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அனைத்து பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மனு தாக்கல் நிகழ்வுகளும் வீடியோ பதிவு செய்யப்படும். வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள், மனு தாக்கல் செய்யாமல் பிரச்சாரம் செய்தாலும், மக்களை சந்தித்தாலும் அந்த நிகழ்வுகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தேர்தல் பிரிவினர் கூறுகையில், ” அரசியல் கட்சி,
வேட்பாளர்களின் கட்சி அலுவலகம் மற்றும் பூத் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் தேர்தல் களத்தில் உள்ள கட்சியினர் என்ன செய்கிறார்கள்.
தேர்தல் பணிகளில் விதிமுறை மீறல் இருக்கிறதா என வீடியோ குழுவினர் கண்டறிந்து பதிவு செய்து வருகின்றனர். இது தவிர பொதுமக்கள் சி விஜில் செயலி மூலமாக புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது,” என்றனர்.
