‘ஷோபா மாடல்’ மீட்டிங்கில் தவெக பெண் எம்எல்ஏ அதிரடி…!

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் தவெகவில் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர் கனிமொழி சந்தோஷ்.

இவர் சமீபத்தில் தனது வீட்டில் கவுண்டம்பாளையம் பகுதி பொது சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் பொது இடங்களில் சுகாதார பணிகள் சிறப்பாக செய்ய வேண்டும். நோய் தொற்று இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டும்.

குப்பை கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். நகர்ப்பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என உத்தரவுகளை வழங்கினார். அப்போது அவர் தனது வீட்டில் சொகுசு சோபாவில் அமர்ந்து கொண்டு அதிகாரிகளை சாதாரண நாற்காலியில் உட்கார வைத்து ஆலோசனை செய்துள்ளதாக தெரியவந்தது.

மேலும் அவர் உட்கார்ந்து இருந்த சோபா மற்றும் அதிகாரிகள் உட்கார்ந்திருந்த நாற்காலி விவரங்களுடன் வீடியோ எடுத்து அதை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள் நீங்கள் இன்னும் இந்த சோபா மாடல் அதிகாரத்தை விடவில்லையா, முதல்வர் விஜய்க்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் இப்படி செயல்படலாமா,

நீங்கள் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடத்தியதே தவறானது. பொது இடங்களுக்கு சென்று என்ன நடக்கிறது என பார்வையிட்டு இருக்க வேண்டும், ஆய்வு செய்து இருக்க வேண்டும். அதிகாரிகளை சட்டமன்ற தொகுதி அலுவலகம் அல்லது பொது சுகாதார துறை அலுவலகத்திற்கு அழைத்து அங்கே வைத்து மீட்டிங் போட்டு பேசி இருக்க வேண்டும்.

நீங்கள் ஏதோ மகாராணி போல் நடந்து கொள்கிறீர்கள். இப்பொழுது தான் ஆட்சிக்கு வந்தீர்கள் அதற்குள்ளே இப்படியா என தமிழக வெற்றி கழகத்தினரே சமூக வலைதளங்களில் ஆவேசமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே கனிமொழி சந்தோஷ் ஜோதிடம் மூலமாக பல்வேறு நோய் தீர்ப்பதாக கூறி ரீல்ஸ். போட்டு கடும் எதிர்ப்பை சம்பாதித்தவர்.

இவரின் பந்தா அரசியல் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு குவிந்து வருகிறது. இந்த நிலையில் பெண் பதவிக்கு அதிகாரத்திற்கு வந்தால் பிடிக்காதா என மீண்டும் இன்ஸ்டா கிராமில் ரீல்ஸ் போட்டு அந்த வீடியோவிற்கும் கடும் எதிர்ப்பை வாங்கி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவர் ரீல்ஸ் போட்டு பிரபலமாகி கட்சியில் சீட் வாங்கினாராம். எனவே ரீல்ஸ் போட்டு மேலும் பிரபலமாக இந்த வேலையை தொடர்ந்து செய்வதாகவும் சோசியல் மீடியாக்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *