சீனியர் வாக்காளர்கள் தான் மெஜாரிட்டி

கோவை மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. கடந்த ஜனவரி மாத வாக்காளர் பட்டியலில் 32,25,198 வாக்காளர்கள் இருந்தனர். தற்போதைய பட்டியலில் 25,74,608 பேர் உள்ளனர். பெண் வாக்காளர்கள் 3,18,44 பேரும், ஆண் வாக்காளர்கள் 3,33,977 பேரும் பட்டியலில் இடம் பெறவில்லை. தற்போதைய பட்டியலில் 12,43,282 ஆண் வாக்காளர்கள், 13,30,807 பெண் வாக்காளர்கள் உள்ளனர். 6,50,590 பேர் அதாவது மொத்த வாக்காளர்களில் 20.17 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். தற்போகைய பட்டியலில் கோவை தெற்கில் அதிகபட்சமாக 26:98 சதவீதம் பேர் நீக்கப்பட்டனர். அதாவது மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

சூலூரில் குறைந்தபட்சமாக 13.38 சதவீதம் பேர் தான் நீக்கப்பட்டிருக்கிறார்கள். 6 சட்டமன்ற தொகுதிகளில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வயது வாரியான வாக்காளர்களில் 18 முதல் 19 வயதினர் 24,296 பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதில் 4,14,998 பேர், 30 முதல் 39 வயதில் 4,96,881 பேர், 40 முதல் 49 வயதில் 5,70,244 பேர், 50 முதல் 59 வயதில் 5,03,586 பேர், 60 முதல் 69 வயதில் 3,38,402 பேர் 70 முதல் 79 வயதில் 1,71,548 பேர், 80 முதல் 89 வயதில் 47,915 பேர், 80 முதல் 99 வயதில் | 5473 பேர், 100 முதல் 109 வயதில் 165 பேர் இருப்பதாக தெரியவந்துள்ளது. நடுத்தர வயதினரான 40 முதல் 49 வயதில் இருப்பவர்கள் தான் மிக அதிகமாக இருக்கிறார்கள். 109 வயதிற்கு மேல் வாக்காளர்கள் யாருமில்லை.

இறந்தவர்கள் பட்டியலில் கோவை வடக்கு தொகுதியில் 14,543 பேர் உள்ளனர். கவுண்டம்பாளையம் தொகுதியில் 13,864 பேர் உள்ளனர். அதிக வாக்காளர்கள் உள்ள பெரிய தொகுதியான கவுண்டம்பாளையத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை, சிறிய தொகுதியான வடக்கு தொகுதியை விட குறைவாக இருக்கிறது. மாவட்ட அளவில் மொத்தமாக இறந்த வாக்காளர்கள் என 1,19,489 பேர் கண்டறியப்பட்டனர். இதில் ஆண் பெண் விவரங்கள் வகைப்படுத்தப்படவில்லை. மீண்டும் வாக்காளர்கள் சேர்ப்பு தொடர்ந்து நடக்கவுள்ளதால் மாவட்ட அளவில் வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *