கோவையில் கட்சிக்காரங்க 2 நாள் ஓட்டு போடலாம்..
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3563 ஓட்டு சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. மாவட்டத்திற்காக 8391 ஓட்டு பதிவு மெசின்கள், 5245 கட்டுப்பாட்டு மெசின்கள், 5885 ஒட்டு சீட்டு சரி பார்க்கும் மெசின்கள் என 19,521 மெசின்கள் பயன்பாட்டில் இருக்கிறது, இவை தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மெசின்களில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பதிவான ஓட்டுக்கள், வேட்பாளர்களின் பெயர்கள், கட்சி மற்றும் சுயேட்சை சின்னங்கள், எண்ணிக்கை விவரங்கள் இடம் பெற்றுள்ளது.
இந்த மெசின்களை ஆய்வு செய்து முதல் நிலை சோதனை (எப்எல்சி) பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. வரும் 8ம் தேதி மொத்த பணிகளும் நிறைவடையும். இதில் தகுதி வாய்ந்த ஓட்டு மெசின்கள், கட்டுபாட்டு கருவிகள் மட்டுமே வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதர மெசின்களை நீக்கம் செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது.
தகுதியான ஒட்டு பதிவு இயந்திரங்களை வைத்து மாதிரி ஒட்டு பதிவு நடத்த வேண்டும். ஓட்டு
எண்ணிக்கை நடத்தி அந்த விவரங்களை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தேர்தல்
கமிஷன் தெரிவித்துள்ளது. இதன்படி வரும் 9 மற்றும் 10ம் தேதி மாதிரி ஒட்டு பதிவு நடத்தப்படும். முதல்
கட்டமாக 1200 ஓட்டுக்களும், அடுத்ததாக 1000 ஓட்டுக்களும், பின்னர் 800 ஓட்டுக்களும் இந்த மெசினில்
பதிவு செய்யப்படும். தேர்தலில் ஒட்டு பதிவு மெசின்கள் எப்படி பயன்படுத்தப்படுமோ அதேபோல் இந்த மெசின்களில் ஒட்டுக்கள் பதிவாகும் அங்கீகரிக்கப்பட்ட 12 அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள். ஏஜன்டுகள் இதில் பங்கேற்று ஓட்டு பதிவு செய்யவுள்ளனர். மெசினில் உள்ள 16 பட்டன்களும் சரியாக இயங்குகிறதா, சின்னம் பதிவாகிறதா, சின்னம் காட்டும் கருவி சரியான முறையில் சின்னம் காட்டுகிறதா, எண்ணிக்கை மெசினில் எண்ணிக்கை விவரங்கள் சரியாக உள்ளதா என இதில் உறுதி செய்யப்படும். குடோனில் இடம் பெற்றுள்ள ஓட்டு மெசின்களை சுழற்சி முறையில் எடுத்து பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது அரசியல் கட்சியினர் சந்தேகம் எதாவது இருந்தால் ஓட்டு பதிவின் போது தெரிவித்து விளக்கம் பெறலாம். மாதிரி ஒட்டு பதிவு முடிந்த பின்னர் அனைத்து ஓட்டு மெசின்களும் இயல்பான நிலைக்கு பெகாண்டு வரப்படும். பின்னர் ஸ்ட்ராங்க் ரூமில் வைக்கப்படும். அதற்கு பின்னர் ஓட்டு பதிவின் போது மட்டுமே எடுக்கப்படும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
