அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம்..


தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி, சங்கங்களின் கூட்டமைப்பு கோவை மாவட்ட கிளை சார்பில்

குறைந்தபட்ச சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படியுடன் வழங்க வேண்டும்.

சிறப்பு கால முறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு அங்கன்வாடி பணியாளருக்கும் சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை ஊழியரின் பணி சுமையை கருதி உடனடியாக நிரப்ப வேண்டும்.

சத்துணவு அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஓராண்டாக வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மருத்துவபடி, மருத்துவக்காப்பீடு மற்றும் ஈமச்சடங்கு தொகை ரூ.25,000 தரவேண்டும் என்பன போன்ற
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி
ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் இன்று நடந்தது . இதில் சங்கத் தலைவர் வீரபத்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *