காந்திபுரம் மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த மாணவன்
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் ஜெகன் . 17 வயதான 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த இந்த சிறுவன் இன்று காலை சைக்கிளில் தனது வீட்டில் இருந்து காந்திபுரம் மேம்பாலத்துக்கு வந்தார். பாலத்தின் அடியில் சைக்கிளை நிறுத்திய ஜெகன் பாலத்தின் மீது ஏறி அங்கே இருந்து குதித்தார். இதில் கால் மற்றும் முதுகெலும்பு உடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மாணவரின் தற்கொலை முயற்சிக்கு என்ன காரணம் என காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்
