பில்லூர் குழாய் டுமீலு.. ரோடு டமாரு..
கோவை மேட்டுப்பாளையம் ரோடு பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரம் பகுதியில் பிரதான பில்லூர் குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. மெயின் ரோட்டில் 1500 மில்லி மீட்டர் விட்டம் கொண்ட பைப் உடைந்ததால் அந்தப் பகுதி ரோடு பள்ளமாக மாறியது.
மேலும் குடிநீர் வீணாகி ரோட்டில் ஆறாக ஓடியது. இது தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க குடிநீர் வடிகால் வாரியத்தினர் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். குழாய் சீரமைப்பு பணிகள் உடனடியாக துவக்கப்பட்டது. குடிநீர் குழாய் பதிக்கப்பட்ட பகுதிகளில் தரம் இல்லாமல் ரோடு அமைக்கப்பட்டதால் இது போன்ற நிலை இருப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். குழாய் உடைப்பினால் கோவை நகர் பகுதியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
