உச்சியில் சிக்கிய ஸ்கை டைனர்.. தலைகீழாக தொங்கிய 22 பேர்..!
கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் 80 அடி உயரம் வரை கீழிருந்து மேலே சென்று குளிர் காற்றில் சூடான உணவு சாப்பிடும் ஸ்கை டைனர் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று இரவு 11 மணியளவில் இந்த ஸ்கை டைனர் இயங்கிக் கொண்டிருந்து.
10 அடி, 20 அடி என படிப்படியாக மேலே சென்ற ரோலர் கோஸ்டர் 80 அடி உயர உச்சிக்கு சென்று அப்படியே ஜாம் ஆகி நின்று விட்டது. மேலும் அதிர்வில் அங்குமிங்கும் ஆடி கீழே விழும் அபாயம் இருந்தது . 22 பேர் சேப்டி பெல்ட் உதவியில் கவிழ்ந்து தொங்கும் நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். காப்பாத்துங்க என அவர்கள் கதறி கூச்சலிட்டனர்.
இதைப் பார்த்து பதறிப் போன அந்த பகுதியில் இருந்தவர்கள்
உடனடியாக கோவை தெற்கு மற்றும் பீளமேடு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை தீயணைப்பு நிலையத்திலிருந்து
உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர்
தொங்கியபடி உயிருக்கு போராடிய அனைவரையும் இரண்டு மணி நேரம் போராடி பத்திரமாக மீட்டனர்.
கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திலிருந்து சலீம் தலைமையில் ஸ்கை லிப்ட் வரவழைக்கப்பட்டது. இந்த ஸ்கை லிப்ட் ஸ்கை டைனர் உயரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உயிருக்கு போராடியவர்களை பாதுகாப்பாக லிப்ட் பகுதியில் ஏற்றினர்.
அந்த நேரத்தில் காற்றின் வீச்சு அதிகமாக இருந்ததால் ஸ்கை லிப்ட் மேல் பகுதி ஆட தொடங்கியது. இருப்பினும் தீயணைப்புத் துறையினர் உறுதியுடன் போராடி அனைவரையும் மீட்டு கீழே கொண்டு வந்தனர்.
இது தொடர்பாக தீயணைப்புத் துறையினர் விசாரித்த போது ரோஉச்சி பகுதியில் இருந்த இரும்பு ராடு துண்டாகி இருந்தது தெரியவந்தது.
இதன் காரணமாக ஸ்கை டைனர் அப்படியே நின்று விட்டதாகவும் தொடர்ந்து ஆடிக்கொண்டிருந்ததாகவும் தெரியவந்தது.
உடனடியாக செயல்பட்டதால் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். அபாயகரமாக இதை அமைத்த கேரளாவை சேர்ந்த நிறுவனத்தின் மீது பீளமேடு போலீசில் புகார் தரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
