ரூ250 கோடியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் டெர்மினல்..!


கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் முதலில் போத்தனூர் தலைமை இடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் தற்போது 7 பிளாட்பாரங்களுடன் இயங்கி வருகிறது. 

தினமும் 120க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள்.

தென்னக ரயில்வேயில் இந்திய ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டி தரும் 2 வ து ரயில் நிலையமாக கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் திகழ்கிறது. இந்த நிலையில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் உள்பட அனைவருக்கும் போதிய வசதியை ஏற்படுத்தும் வகையிலும் ஜங்ஷன் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் வகையிலும் புதிய டெர்மினல் அமைக்கப்பட உள்ளது.

3 அடுக்கு மாடி கட்டிடத்துடன் இந்த புதிய டெர்மினல் அமைக்கப்பட உள்ளது. கூடுதல் கார் பார்க்கிங் வசதி மற்றும் தற்போது ரயில் நிலையத்தில் உள்ள சுரங்க நடைமேடை போல கூடுதலாக ஒரு சுரங்க நடைமேடை உள்ளிட்ட வசதிகளுடன் இந்த புதிய டெர்மினல் அமைக்கப்பட உள்ளது. மேலும் எஸ்கலேட்டர் வசதி, லிப்ட் வசதி, நவீன கட்டுப்பாட்டறை உள்ளட்ட வசதிகளுடன் 250 கோடி மதிப்பீட்டில் டெர்மினல் அமைக்கப்பட உள்ளது. 

இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ள நிலையில் இன்று தென்னக ரயில்வே மண்டல பொது மேலாளர் எஸ். என் .சிங் ரயில் நிலையத்தில் அதிகாரிகள் மற்றும் கட்டுமான துறையினருடன் ஆய்வு செய்தார். அப்போது கார் பார்க்கிங் அமைய உள்ள இடம் மற்றும் பயணிகள் காத்திருப்பு இடம் போன்றவற்றை பார்வையிட்டார். விரைவில் திட்டப் பணி துவக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *