விஜய் மீது எல்லோருக்கும் பயம்; கோவையில் செங்கோட்டையன் பேட்டி..!

கோவை விமான நிலையத்தில் தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனை இன்று நிருபர்கள் சந்தித்து கேள்வி கேட்டனர்.

பாஜகவை டப்பா என்ஜின் என்ற நடிகர் விஜயிடம் என்ஜினே இல்லை என்ற பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் விமர்சனம் செய்தது தொடர்பாக கேட்ட போது தவெகவை தமிழக மக்கள் தெளிவாக முடிவு செய்துள்ளார்கள். இரண்டு இயக்கங்கள் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டுமா, புதிதாக ஒருவர் தோன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த தவெக இயக்கம் வீறுநடை போட்டு கொண்டுள்ளது பயம் என்ற அச்சம் இருப்பதால் விஜயை பற்றி ஒவ்வொருவரும் கருத்து சொல்கின்றனர்.

வெற்றி என்ற முடியாத இலக்கை எட்டுவதன் காரணமாக கருத்துக்களை சொல்லி வருகின்றனர். தன்னுடைய இடத்தில் வெற்றி பெற முடியாது என்ற தோல்வி பயம் காரணமாக இத்தகைய கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். வெளிநாட்டில் உள்ள 3 லட்சம் இளைஞர்கள் எப்போது தேர்தல் வரும் என, தமிழ்நாட்டிற்கு வந்து ஒட்டு போட வேண்டும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

விஜய் தமிழகத்தை ஆள வேண்டும் என்பது புதிதாக வாக்களிப்பவர்கள், 35 வயதிற்கு குறைவானவர்களின் கருத்தாக உள்ளது. குழந்தைகள் தங்களது தாய், தந்தை, பெரியவர்களிடம் தவெகளிற்கு வாக்களிக்க வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர். தவெக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று விஜய் முதலமைச்சராக வருவார் என்றார்.

விஜய் குறித்த எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விக்கு செங்கோட்டையன், “தோல்வி பயம் ஏற்பட்டதால் இதுபோன்ற கருத்துகளை பகிர்ந்து வருகிறன்றனர். என்ன கருத்து வேண்டுமானாலும் அவர் சொல்லட்டும், அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

ஒவ்வொரு நாளும் ஒரு தேர்தல் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அது ஒட்டுமொத்தமாக கொடுக்க வேண்டியது தானே. ஒவ்வொரு நாளும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை தருவதில் இருந்தே, எடப்பாடி பழனிசாமி எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார் என்பதை காட்டுகிறது, ” என்றார். ஓபிஎஸ் தவெக் கூட்டணிக்கு வருவாரா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *