கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் தாக்குதல்..!

வாடகை கேட்டுவிட்டு போறியா என கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவர்கள் வயதானவர் மீது தாக்குதல் நடத்தியது இன்று பரபரப்பு ஏற்படுத்தியது.

கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வயதான நபர் மற்றும் பெண் ஒருவர் ஆட்டோவில் செல்வதற்காக வாடகை குறித்து இன்று காலை விசாரித்தனர் அப்போது ஆட்டோ டிரைவர் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தார் வாடகை தொடர்பாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் கோபமடைந்த ஆட்டோ டிரைவர் மற்றும் அவருக்கு உதவியாக வந்த இன்னொரு டிரைவர் அந்த வயதான நபர் மற்றும் பெண்ணை கடுமையாக தாக்கினர் . முகத்தில் அடித்து வயதானவரை கீழே தள்ளிவிட்டனர். பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு பேரையும் அவர்கள் ஆபாசமாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்த ஒருவர் ஆட்டோ டிரைவர்களின் தாக்குதல் காட்சிகளை வீடியோ பதிவு செய்தார் .

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொது இடங்களில் குறிப்பாக பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்களில் டிரைவர்கள் பொதுமக்களிடம் அநாகரிகமாக பேசுவது மரியாதையின்றி நடந்து கொள்வது அதிகமாகிவிட்டது. கேட்ட வாடகை தராதவர்கள் மீது கேவலமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இது போன்ற நபர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் ஸ்டாண்ட் மற்றும் முக்கிய இடங்களில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *