கோவையில் ஊருக்குள் புகுந்த 3 யானைகள் ; ஹாரன் அடித்து விரட்டியதால் பரபரப்பு..!
கோவை குப்பனூர் தீத்திபாளையம் பகுதியில் நேற்று மூன்று யானைகள் காட்டிலிருந்து வெளியேறி ஊருக்குள் புகுந்தன . யானைகள் வாழைத்தோட்டம் மற்றும் குடியிருப்பு பகுதியில் இருந்த நீர் தொட்டிகளில் தண்ணீர் குடித்து ஜாலியாக சுற்றிக் கொண்டிருந்தன.
இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் யானைகளை வாகனங்களில் சென்று ஹாரன் சத்தம் மூலமாக விரட்டினர் .
மூன்று பெண் யானைகள் வாகனங்களின் சத்தம் கேட்டு வேகமாக ரோடு வழியாக ஓட்டம் பிடித்தன. தொடர்ந்து ஹாரன் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததால் யானைகள் பயந்தபடி ஓடின. தினமும் யானைகள் வனத்திலிருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி கிராம பகுதிகளுக்கு வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர்.
யானைக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் வசதியை செய்து தர வேண்டும். வன எல்லையில் நீர் தொட்டி அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும் . வெயில் காரணமாக வனப்பகுதி ஓடைகள் வறண்டு போய்விட்டன. இதன் காரணமாக யானைகள் தண்ணீர் தேடி கிராமங்களுக்கு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பகல் நேரத்தில் யானைகள் ஊருக்குள் சுற்றியது பரபரப்பை ஏற்படுத்தியது .
