கோவையில் வாலிபர் கையை கட்டி குளத்தில் வீசி கொலை..!

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் இன்று சடலம் ஒன்று மிதந்தது. அந்தப் பகுதி பொதுமக்கள் ரேஸ் கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் . போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர் . இறந்த நபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கலாம்.

அவரின் கைகள் கட்டப்பட்டிருந்தது. மர்ம நபர்கள் அந்த நபரை தாக்கி கைகளை கட்டி தண்ணீரில் தூக்கி வீசி சென்று இருக்கலாம் என தெரிகிறது. உக்கடம் சுங்கம் பைபாஸ் ரோட்டில் இருந்து அந்த நபரை குளத்துக்குள் வீசி இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து கொலையாளிகள் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வாலிபரை கயிற்றால் கையை கட்டி குளத்தில் தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த நபர் யார் என அடையாளம் கண்டறிய முடியவில்லை. ஒரு நாளைக்கு முன்பு இந்த கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *