கோவை மதுக்கரை பைபாஸ் ரோடு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து.. !
கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோடு கற்பகம் கல்லூரி அருகே சரவணகுமார் என்பவருக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் குடோன் உள்ளது.
இன்று மதியம் அந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. தீ வேகமாக பரவிய நிலையில் அந்த வளாகம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது.
இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையம் மற்றும் கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்
தீ தீவிரமாக பரவியதால் உடனடியாக அணைக்க முடியவில்லை. பைபாஸ் ரோடு முழுவதும் கரும்புகையால் மூச்சு திணறல் ஏற்பட்டது. அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை நிறுத்திவிட்டு என்ன செய்வது என தெரியாமல் தவிப்படைந்தனர். மின் ஒயர் பழுது காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். மின்விசிறி கான உதிரி பாகங்கள், சமையல் கூடங்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உள்பட பல்வேறு வகையான பொருள்கள் இந்த விபத்தில் நாசமானது.
தற்போது கடும் வெப்பத்தினால் தொழில் நிறுவனங்களில் தீ அபாயம் அதிகமாகி வருவதாக தெரிகிறது. தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும். பிளாஸ்டிக் ,ஆயில், பேப்பர் போன்றவற்றை பயன்படுத்தும் நிறுவனங்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
