பி எப் சந்தாதாரர்களுக்கு முக அடையாள தொழில்நுட்பம்(FAT) நடைமுறை..
மத்திய வருங்கால வைப்பு நிதிஆணையரும், தொழிலாளர வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி கோவை மண்டலத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக கோவைக்கு வருகை தந்தார்.
திருப்பூர் பிராந்திய அலுவலகத்தையும் பார்வையிட்டு சஹாயக் செயற்கை நுண்ணறிவு உதவி மையத்தை திறந்தார். இந்த பயணத்தின்போது கொடிசியா, கொசிமா, உபாசி, டீ, ஒசைரி உற்பத்தியாளர் சங்கம், சின்னவேடம்பட்டி தொழில் சங்கம் போன்றவற்றின் பிஎப் தொடர்பான பரிந்துரை, எதிர்பார்ப்பு அறிய சந்திப்பு நடத்தப்பட்டது.
வேலை வாய்ப்பு உருவாக்கத்தை ஊக்குவிக்க மற்றும் பணியாளர் வெளியேற்றத்தை குறைக்கும் நோக்கில் இந்திய அரசின் முக்கிய திட்டமான பிரதான மந்திரி விக்சித் பாரத ரோஜ்கர் யோஜனா திட்டத்தில் பதிவு செய்வதன் நன்மைகளை ஆணையர் விளக்கினார். இந்தத்திட்டம் நிறுவனங்களில் உற்பத்தித்திறனை உயர்த்துவதோடு திறமையான பணியாளர்களை உருவாக்க உதவும் என அவர் தெரிவித்தார்.
நிறுவனங்கள் இசிஆர் பதிவை நேரத்தில் சமர்ப்பிக்கவேண்டும். செயலியின் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் முக அடையாள தொழில் நுட்ப முறையில் (FAT) நடைமுறைப்படுத்தவேண்டும், முதல்முறையாக பணியில் சேரும் ஊழியர்கள் அனைவருக்கும் டிபிடி வசதியுள்ள வங்கி கணக்குகள் இருக்கவேண்டும்.
2026-2027 ம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டவிதிமுறைகளை முறையாக பின்பற்றுதலை உறுதி செய்வதில் கவனம் செலுத்தப்படும்.
பிற துறைகளுடன் அடிப்படையிலான தரவு ஒருங்கிணைப்பை பயன்படுத்தி அனைத்து நிறுவனங்களிலும் விதிமுறை பின்பற்றலை அடைவதே இலக்காக உள்ளது. இதனை | முன்னிட்டு அறிவித்துள்ள பொது மன்னிப்பு திட்டத்தில் நிறுவனங்கள் தன்னார்வமாக பங்கேற்று பதிவு செயல்முறைகளை ஒழுங்குபடுத்தி எதிர்காலத்தில் ஏற்படும் அபராதங்களை தவிர்க்கவேண்டும்.
|பிஎப் உறுப்பினர்களுக்கு பங்களிப்புநிதி பணத்தை எளிதாகவும் விரைவாகவும் பெற உதவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் யுபிஐ மூலம் தொகையை பெறும் வசதியும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது உறுப்பினர்கள் தகுதியுள்ள பிஎப் இருப்புத்தொகையின் 100 சதவீத கல்வி மற்றும் திருமணம் தொடர்பான பணம் பெறும் வரம்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 12 மாதங்கள் என ஒரேவிதமாக நிரணயிக்கப்பட்டுள்ளது. இதனால்கோரிக்கை நிராகரிப்புகள் மற்றும் புகார்கள் குறையும் என ஆணையர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
