கோவை உக்கடம் பஸ் டெர்மினல் 1 நாளை திறப்பு..!
கோவை உக்கடம் பகுதியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வந்தது. இங்கே உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் அமைக்கப்பட்ட நிலையில் பஸ் ஸ்டாண்ட் பகுதி இடிக்கப்பட்டது.
இதற்கு பதிலாக செல்வபுரம் பைபாஸ் ரோடு பகுதியில் இருந்த மீன் மார்க்கெட் மற்றும் குடியிருப்பு பகுதி இடிக்கப்பட்டு 13 கோடி ரூபாய் செலவில் உக்கடம் முனையம் 1 என்ற பெயரில் உக்கடம் பஸ் டெர்மினல் அமைக்கும் பணி நடந்தது.
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செல்லும் வகையில் டவுன் பஸ்கள் நிறுத்தும் வகையில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கப்பட்டது.
ஆறு மாத காலத்தில் பணிகள் முடிந்து இன்று திறக்கப்பட உள்ளது . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக இந்த பஸ் ஸ்டாண்ட்டை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவக்கி வைக்க உள்ளார்.
இந்த பஸ் ஸ்டாண்டில் 58 பஸ்கள் நிறுத்தும் வகையில் ரேக் அமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர 80 பஸ்கள் ஒரே நேரத்தில் பஸ் ஸ்டாண்ட் பகுதியை பயன்படுத்த முடியும் .
தாய்மார்கள் பாலூட்டும் அறை பயணிகள் காத்திருக்கும் கூடம் மூன்று கழிவறை செல்போன் சார்ஜிங் பாயிண்ட் இலவச வைபை போன்ற வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது.
குறுகிய காலத்தில் பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறது . ஆனால் அதே நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் கூடுதல் வசதிகள் எதுவும் இல்லாமல் பிளாட்பாரம் மேற்கூரை ரேக் என மிகச் சாதாரணமான கட்டுமான பணிகள் மட்டுமே நடத்தப்பட்டிருக்கிறது.
அவசர கதியில் பணிகளை விரைவாக நடத்த வேண்டும் என வேகமாக முடிக்கப்பட்டிருக்கிறதாக பொதுமக்கள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
உக்கடம் பஸ் டெர்மினல் 2 கட்டுமான பணிகள் 11.50 கோடி ரூபாய் செலவில் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடக்கிறது. விரைவு பஸ் கேம் பயன்படுத்தும் வகையில் இந்த பஸ் ஸ்டாண்ட் உருவாக்கப்படுகிறது. இந்த பணி முடிய மேலும் சில மாதங்கள் ஆகும்.
