விஜய் தான் முதல்வர்..! துணை முதல்வர் ஆசை இல்லை.. செங்கோட்டையன் பேட்டி
கோவை ஏர்போர்ட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது
டெல்லி நிகழ்வில் த.வெ.க தலைவர் விஜய் உரிய பதிலை தெரிவித்திருக்கிறார். முதலமைச்சராக செயல்பட வேண்டும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் அனைத்தையும் விட்டு மக்கள் பணிக்காக அரசியலுக்கு வந்து இருக்கிறார்.
தற்போது அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் அதிக அளவில் கூட்டமாக வருகிறார்கள். தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் நிலவுகிறது . தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது என்ற மன நிலையில் மக்கள் உள்ளனர். மாற்றத்தை கொண்டு வரக் கூடிய திறன் விஜய்க்கு மட்டுமே உள்ளது.
234 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடக் கூடிய சிறந்த வேட்பாளர்கள் த.வெ.க கட்சியில் உள்ளனர். தவெக மற்றும் என்டிஏ கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை.
துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற தகவல்கள் சரியானது அல்ல. விஜய் முதலமைச்சராகவே வர வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் அனைத்தையும் விட்டு அரசியலுக்கு வந்து உள்ளார். எனவே அதை நோக்கி தான் நாங்கள் செல்கிறோம்.
தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகு மக்கள் இவ்வளவு அதிகமாக ஆர்ப்பரித்து வருவது இதற்கு முன் பார்த்ததில்லை .
