கோவையில் பதுக்கிய 98 கிலோ கஞ்சா பறிமுதல்…!

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் கஞ்சா மூட்டை மூட்டையாக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது .

போலீசார் சம்பவ இடத்திறகு சென்று விசாரணை நடத்தினர் அப்போது ஒரு பழைய கார் விற்பனை வளாகத்தில் மூட்டைகளில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர் . மொத்தம் 98 கிலோ எடையில் கஞ்சா இருந்தது.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கஞ்சா மூட்டைகளை பதிக்க வைத்த அப்பாஸ் (27), ஜெனி ஜேக்கப் (32), ரூபன் (31), நவ்புல் (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்தும் கேரளாவில் இருந்தும் கஞ்சா மூட்டை மூட்டையாக கடத்தி வந்து கோவையில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் ஐடி நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினருக்கு கோவையில் கஞ்சா சப்ளை நடக்கிறது.

ஒட்டு மொத்த வியாபாரிகள் மூலமாக சிறு வியாபாரிகள் மற்றும் மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலங்களை கொடுத்து விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. பிடிபட்ட கஞ்சா தொடர்பாக போலீசார் விரிவாக விசாரணை நடத்துகின்றனர். தேர்தல் பிரிவு அதிகாரிகளும் கஞ்சா பதுக்கலின் பின்னணி குறித்து விசாரிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *