கோவையில் மாதிரி வாக்குச்சாவடி…
கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவு சார்பில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இன்று நடத்தப்பட்டது .தனியார் கல்லூரியில் மாணவிகள் பங்கேற்கும் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது . இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கூடுதல் கலெக்டர் சங்கீத் பல்வந்த் வாகே தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர் .
இதில் மாதிரி வாக்கு சாவடி அமைக்கப்பட்டது . இதில் மாணவிகள் ஓட்டு போட பயிற்சி தரப்பட்டது. ஓட்டு போடுவது எப்படி என செயல் விளக்கம் காண்பிக்கப்பட்டது. மேலும் தேர்தல் கோலங்கள் கலை நிகழ்ச்சிகள் மூலமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
