பொள்ளாச்சியில்அதிமுக மாஜி அமைச்சர் படங்களுக்கு பாவாடை ,செருப்பு மாலை…!
கோவை பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்ட் அருகே சென்டர் சென்டர் மீடியன் பகுதியில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், விஜயபாஸ்கர், சிவிசண்முகம், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் ஆகியோர் முழு உருவ படங்களுக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்தது.
திண்டுக்கல் சீனிவாசன் படத்திற்கு செருப்பு மாலையுடன் பாவாடையும் அணிவிக்கப்பட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கடந்த 17ம் தேதி நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் சேலை தொடர்பாக பேசிய போது ஆபாசமான கருத்தைகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதேபோல் சிவி சண்முகம் நடிகை நயன்தாரா பெயரை குறிப்பிட்டு ஆட்சேபமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இதேபோல் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அம்மன் அர்ஜுனன் ஆகியோர் தவறான கருத்துக்களை வெளியிட்டதாக தகவல் வெளியானது .
இதற்காக அவர்களது படங்களை கட்டவுட் போல் சித்தரித்து அதில் செருப்பு மாலை அணிவித்து யாரோ அரசியல் நோக்கத்துடன் இதை செய்திருப்பதாக தெரிகிறது. இதை செய்தது யார் என பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இதன் பின்னணியில் அரசியல் கட்சியின் செயல்பாடு இருக்கிறதா என தேர்தல் பிரிவினரும் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது
