கோவை மாவட்டத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகை பணம் பொருட்கள் பறிமுதல்…!

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் பல்வேறு தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர் சோதனை செய்து பறிமுதல் செய்து வருகிறார்கள்.

முதல் நாளான 16ம் தேதி 4 இடங்களில் நடந்த சோதனையில் 30,17,150 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. 56,244 ரூபாய் மதிப்பிலான 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 17ம் தேதி நடந்த சோதனையில் லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா 7.13 லட்ச ரூபாய் மதிப்பிலான சில்வர் ஆபரணம் போன்ற பரிசு பொருட்கள், 66 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலை, சமையல் பொருட்கள் போன்ற வகையான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று வரை 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை, பரிசு பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்து ஒப்படைக்கப்பட்டது. இன்றும் பல்வேறு பகுதியில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டது.

இன்று மாலை வரை நடந்த சோதனையில் 2.04 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் நகை பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 302 கிராம் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது மொத்தமாக கடந்த மூன்று நாட்களில் 696 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *