கோவையில் 85 வயது முதியோருக்கு தபால் ஓட்டு சீட்டு விண்ணப்பங்கள் விநியோகம்

85 வயது முதியோர்களுக்கு தபால் ஒட்டு சீட்டு விண்ணப்ப படிவங்கள் சப்ளை கோவை, மார்ச் 20: கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 40 சதவீதத்திற்கும் மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினைத் தவிர்க்கும் பொருட்டு, தபால் ஓட்டு போட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவர்களின் விருப்பத்தினை பெற ஏதுவாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12டீ மற்றும் வாக்காளர் பட்டியலுடன் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் செல்வார்கள் தபால் ஓட்டு சீட்டு படிவங்களுடன் அலுவலர்கள் வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தினை படித்துப் பார்த்தும், பாடிக்கக் கேட்டும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு தொடர்பான, தங்களது விருப்பத்தினை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்திற்கோ நேரில் சென்று 3.4.2026ம் தேதிக்குள் படிவம் 12 டீ யினை பூர்த்தி செய்து அதற்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் முதியோர், மாற்று திறனாளிகள் நேரில் செல்வ முடியாத நிலையில், சம்பந்தப்பட்ட வாக்காளர்களை தேடி பூத் லெவல் அலுவலர்கள் செல்வ உத்தரவு வழங்கப்பட்டது. நேற்று முதல் சீனியர் வாக்காளர்களை தேடி பூத் லெவல் ஆபீசர்கள் விண்ணப்ப படிவங்களுடன் சென்றனர். தபால் ஓட்டு போட விருப்பமா என கேட்டனர். விருப்பம் உள்ளவர்களுக்கு படிவம் வழங்கினர். சிலர், நேரில் ஒட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போட தயாராக இருப்பதாக தெரிவித்தனர். மாவட்ட அளவில் சில நாட்கள் இந்த படிவம் வழங்கப்படும். தபால் ஓட்டு போட விருப்பம் உள்ளவர்களுக்கு ஓட்டு பதிவுக்கு முந்தைய 4 நாட்கள் வரை தபால் ஓட்டு நேரில் சென்று பெட்டியில் பெறப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *